×

காங்கயம் வாரச்சந்தையில் பீன்ஸ் ரூ.180 க்கு விற்பனை

 

காங்கயம், மே 21: காங்கயம் வாரச்சந்தையில் 1 கிலோ பீன்ஸ் ரூ.180 க்கு விற்பனை செய்யப்பட்டது. காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட வாரச்சந்தை திங்கட்கிழமை தோறும் நடைபெறும். அந்த வகையில் நேற்று சந்தையில் தக்காளி ரூ.40 க்கும், சின்ன வெங்காயம் ரூ.70 க்கும், பெரிய வெங்காயம் ரூ.40 க்கும், கத்திரிக்காய் ரூ.70, க்கும், கேரட் ரூ.90 க்கும், பீன்ஸ் ரூ.180 க்கும், உருளைக்கிழங்கு ரூ.60 க்கும், பீட்ரூட் ரூ.80 க்கும், முருங்கை கிலோ ரூ. 80 க்கும், பச்சை மிளகாய் ரூ‌.90 க்கும், காலி பிளவர் ரூ‌. 30 க்கும், நாட்டு அவரை ரூ.140 க்கும், முள்ளங்கி ரூ‌.40க்கும், புடலங்காய் ரூ. 50க்கும், வெண்டைக்காய் ரூ‌. 70க்கும், பீர்க்கங்காய் ரூ.120க்கும், கொத்தவரை ரூ.60க்கும், கோவைக்காய் ரூ.70க்கும், முட்டைக்கோஸ் ரூ. 60க்கும், பூண்டு ரூ.200க்கும், வரமிளகாய் ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டது‌. மழையின் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது என சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post காங்கயம் வாரச்சந்தையில் பீன்ஸ் ரூ.180 க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Kangayam ,Kangyam ,Kangayam Municipality ,
× RELATED தேங்காய் பருப்பு ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து