×

கட்டணம் பெறப்படுவதாக புகார் அரசு பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலர் ஆய்வு

 

திருப்பூர், மே 22: திருப்பூரில் பல்வேறு அரசு பள்ளிகளில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். அந்தப் பள்ளி குழந்தைகளுக்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகளை வழங்கப்படுகிறது. இந்நிலையில், திருப்பூர் பெருமாநல்லூர் ரோடு பகுதியில் உள்ள கணக்கம்பாளையம் அரசு பள்ளியில் 11 ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பணம் கேட்பதாகவும், அப்படி பணம் கொடுக்காத மாணவர்களுக்கு அட்மிஷன் தாமதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கீதா நேற்று நேரடியாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு தலைமையாசிரியர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார். தொடர்ந்து மாணவர்களுக்கு முறையாக அட்மிஷன் வழங்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து கணக்கம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்கப்பட்டது.

The post கட்டணம் பெறப்படுவதாக புகார் அரசு பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Govt ,Tirupur ,Kankampalayam Government School ,Perumanallur Road ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து