மொடக்குறிச்சி, மே 12: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1523 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில் கருப்பு ரகம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.148.50க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.123.99க்கும், சராசரி விலையாக ரூ.136.99க்கும், சிவப்பு ரகம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.148.00க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.118.99க்கும், சராசரி விலையாக ரூ.133.69க்கும், வெள்ளை ரகம் கிலோ ஒன்றுக்கு ஒரே விலையாக ரூ.133.62க்கு ஏலம் போனது. மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரத்து 793 கிலோ எடையுள்ள எள் ரூ.1 கோடியே 53 லட்சத்து 63 ஆயிரத்து 24 ரூபாய்க்கு விற்பனையானது.
The post ரூ.1.53 கோடிக்கு எள் ஏலம் appeared first on Dinakaran.