- மோடி
- பாபு
- ஜெகன்
- பவன்
- ராகுல் காந்தி
- கடப்பா
- திருமலா
- ஆந்திரப் பிரதேசம்
- காங்கிரஸ்
- ஷர்மிளா
- இந்தியா கூட்டணி
- முதல் அமைச்சர்
- ராஜசேகர் ரெட்டி
- தின மலர்
திருமலை: ஆந்திர மாநிலத்தில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறுகிறது. இறுதிகட்டமாக கடப்பாவில் காங்கிரஸ் எம்.பி. வேட்பாளர் ஷர்மிளா, இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி பிரசாரம் செய்தார். முன்னதாக அங்குள்ள ஆந்திரா முன்னாள் முதல்வர் ராஜசேகரரெட்டி நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார். இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசியதாவது: ஒய்எஸ்ஆர் எனது தந்தைக்கு சகோதரர் போன்றவர். எனது பாரத் ஜோடோ யாத்திரைக்கு உத்வேகம் அளித்தது ராஜசேகரின் பாதயாத்திரை தான். பாதயாத்திரை செய்தால்தான் மக்களின் துயரங்களை அறிய முடியும் என்ற ராஜசேகர் கோட்பாட்டின்படி தான் யாத்திரை மேற்கொண்டேன்.
ஆந்திராவில் தற்போது ஒய்.எஸ்.ஆர். (ராஜண்ணாவின்) ஆட்சி தெரியவில்லை. அப்போது ராஜசேகரின் கருத்து டெல்லியில் எதிரொலித்தது. தற்போது ஜெகன் பாஜகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறார். பி என்றால் சந்திரபாபு, ஜெ என்றால் ஜெகன், பி என்றால் பவன் கல்யாண் இவர்களின் ரிமோட் கன்ட்ரோல் மோடியிடம் உள்ளது. மோடியிடம் ஈடி, சிபிஐ போன்ற ஆயுதங்கள் இருப்பதால் தான் ஜெகன் பி டீமாக செயல்படுகிறார். ராஜசேகரின் சித்தாந்தங்கள் பாஜகவுக்கு எதிரானவை. ஆனால் ஜெகன் பாஜகவை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சந்திரபாபுவின் நிலையும் அப்படித்தான். சந்திரபாபு மீது வழக்குகள் இருக்கிறது. அதனால் தான் மோடியை கேள்வி கேட்க தைரியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
The post மோடியிடம் ரிமோட் கன்ட்ரோல்; B என்றால் பாபு; J என்றால் ஜெகன்; P என்றால் பவன்: கடப்பா பிரசாரத்தில் விளாசிய ராகுல்காந்தி appeared first on Dinakaran.