×
Saravana Stores

கொளத்தூரில் கட்டப்பட்டுவரும் புதிய சிறப்பு மருத்துவமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: தமிழ்நாடு அரசு

சென்னை: கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் கட்டப்பட்டு வரும் சிறப்பு மருத்துவமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ரூ.110 கோடியில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சிறப்பு மருத்துவமனை கட்டப்படுகிறது. கொளத்தூரில் புதிய சிறப்பு மருத்துவமனை கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மருத்துவமனையின் தரைத் தளத்தில் தீவிர சிகிச்சை, நவீன சலவையகம், வாகன நிறுத்துமிடம் வசதிகள் இடம்பெறும்.

முதல் தளத்தில் பிரசவ வார்டுகள், மறுவாழ்வு வார்டுகள், ரத்த வங்கி, 3 அறுவை சிகிச்சை அரங்கங்கள் அமைக்கப்படுகின்றன. 2, 3-ம் தளங்களில் முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட வார்டு, முழு உடல் பரிசோதனை, குழந்தைகள் வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 4, 5, 6-ம் தளங்களில் சிறப்பு புறநோயாளிகள் பிரிவு, நீரிழிவு வார்டு, இதயவியல் வார்டு, கேத் ஆய்வகம் அமைக்கப்படுகின்றன. கட்டடத்தின் அனைத்து தளங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளும் அமைக்கப்படுகின்றன.

The post கொளத்தூரில் கட்டப்பட்டுவரும் புதிய சிறப்பு மருத்துவமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Kolathur ,Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Kolathur district ,Periyar ,
× RELATED கல்வி நிறுவனங்களில் போதைபொருள்...