×

பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் ஆர்கேஆர் கல்வி நிறுவனம் சாதனை

உடுமலை, மே 11: உடுமலை ஆர்கேஆர் கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீதம் சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய 286 மாணவர்களில் 139 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 490க்கு மேல் 7 மாணவர்களும், 480க்கு மேல் 21 மாணவர்களும், 470க்கு மேல் 39 மாணவர்களும், 460க்கு மேல் 58 மாணவர்களும், 450க்கு மேல் 77 மாணவர்களும், 400க்கு மேல் 139 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் 13 பேரும், அறிவியலில் 5 பேரும், சமூக அறிவியலில் 5 பேரும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மாணவி யுகாஷினி 498 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவி நித்திலா 496 மார்க் பெற்று 2ம் இடமும், மாணவன் அபிநந்தன் 493 மார்க் பெற்று 3ம் இடமும் பிடித்தனர்.

10ம் வகுப்பு தேர்வில் ஆர்கேஆர் கல்வி நிறுவனம் 59 ஆண்டுகளாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, தேசிய நல்லாசிரியர் ஆர்.கே.ராமசாமியின் முழு நேர நேரடி கண்காணிப்பு, ஆலோசனை, முதல்வர், ஆசிரியர் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்பால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. இனி வருங்காலத்திலும் 100 சதவீத தேர்ச்சியை தொடர்ந்து பெறுவோம் என பள்ளி தலைவர் ஆர்.கே.ஆர் ராமசாமி தெரிவித்தார். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களையும், ஆசிரியர்களையும் பள்ளி தலைவர் ஆர்.கே.ராமசாமி, செயலர் கார்த்திக்குமார், முதல்வர்கள் டி.மாலா, மஞ்சுளா தேவி, செல்வக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், உடுமலை நகர முக்கிய பிரமுகர்கள் பாராட்டினர்.

The post பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் ஆர்கேஆர் கல்வி நிறுவனம் சாதனை appeared first on Dinakaran.

Tags : RKR Education Institute ,Udumalai ,RKR ,institutes ,Dinakaran ,
× RELATED ஒப்பந்த கூலி வழங்க வலியுறுத்தல்...