×
Saravana Stores

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்று சாதனை

திருவள்ளூர், மே 11: திருவள்ளூர் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2023 – 24 கல்வியாண்டில் 136 மாணவர்கள் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் நிலையில் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்நிலையில் கேஷ்னா 500க்கு 492 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ் 94, ஆங்கிலம் 99, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 99 எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். அதேபோல் மாணவி தமிழிசை 500க்கு 490 மதிப்பெண்களும், மாணவி ஸ்வேதா 500க்கு 490 மதிப்பெண்களும், மாணவன் ஜெயந்த் 500க்கு 490 மதிப்பெண்களும் எடுத்து மூன்று பேரும் பள்ளியில் 2 ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

மேலும் மாணவி சிரிஷா 500க்கு 489 மதிப்பெண்களும், மாணவி நித்திய பிரியா 500க்கு 489 மதிப்பெண்களும் எடுத்து 2 பேரும் பள்ளியில் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். மேலும் 25 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்களும், 36 மாணவர்கள் 99 மதிப்பெண்களும், 28 மாணவர்கள் 98 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் 490க்கு மேல் 4 மாணவர்களும், 480க்கு மேல் 17 மாணவர்களும், 470க்கு மேல் 10 மாணவர்களும், 450க்கு மேல் 28 மாணவர்களும், 400க்கு மேல் 38 மாணவர்களும் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவர்களையும், இதற்குக் காரணமான ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர் மோ.தி.உமாசங்கர், பள்ளி நிர்வாகிகள், பள்ளி தலைமையாசிரியர்கள் ஜே.மேரி, நே.குமரீஸ்வரி ஆகியோர் வாழ்த்தி தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

The post 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்று சாதனை appeared first on Dinakaran.

Tags : Bharathidasan Matriculation School ,Thiruvallur ,Bharathidasan Matriculation Higher Secondary School ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை...