×
Saravana Stores

பத்தாம் வகுப்பு தேர்வில் 86.10 சதவீத தேர்ச்சி * மாநில அளவில் 36வது இடம் பிடித்தது * மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகம் திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை, மே 11: பத்தாம் வகுப்பு அரசு ெபாதுத் தேர்வில், திருவண்ணாமலை மாவட்டம் 86.10 சதவீத ேதர்ச்சி ெபற்று, மாநில அளவில் 36வது இடத்ைத ெபற்றுள்ளது. கடந்த 2023-2024ம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8ம் தேதிவரை நடந்து முடிந்தது. மேலும், விடைத்தாள் திருத்தும் பணி முழு வீச்சில் நடந்தது. அதன் தொடர்ச்சியாக, தேர்வு முடிவுகள் நேற்று அரசு தேர்வுகள் துறையால் வெளியிடப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அரசு தேர்வுத்துறை இணைய தளத்தில் வெளியானது. மேலும், பள்ளி தகவல் பலகையிலும் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது. அதோடு, மாணவர்கள் பதிவு செய்திருந்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம (எஸ்எம்எஸ்) தேர்ச்சி மற்றும் மதிப்பெண் விபரம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 15,917 மாணவர்கள், 15,017 மாணவிகள் உள்பட மொத்தம் 30,934 பேர் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதினர். அதில், 24936 மாணவர்கள், 13,698 மாணவிகள் உட்பட மொத்தம் 26,634 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 86.10 சதவீத தேர்ச்சியாகும். மேலும், மாணவர்கள் 81.27 சதவீதமும், மாணவிகள் 91.22 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவிகளின் தேர்ச்சி சதவீதமே அதிகரித்திருக்கிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சியில், மாநில அளவில் திருவண்ணாமலை மாவட்டம் 36வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 30வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளின் தேர்ச்சி 79.13 சதவீதமும், அரசு பள்ளிகளின் தேர்ச்சி 83.69 சதவீதமும், அரசு நிதியுதவி பள்ளிகள் 72.95 சதவீதமும், நகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி 82.11 சதவீதமும், மெட்ரிக் பள்ளிகளின் சதவீதம் 92.72 சதவீதமும், பழங்குடியினர் நலப் பள்ளிகளின் தேர்ச்சி 95.51 சதவீதமும், சமூக நலத்துறை பள்ளிகள் 100 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. இந்நிலையில், மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதை தவிர்க்க, பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியலை, மாநில மற்றும் மாவட்ட அளவில் வெளியிட தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதனால், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களின் விபரங்களை பள்ளிக் கல்வித்துறை இந்த ஆண்டும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post பத்தாம் வகுப்பு தேர்வில் 86.10 சதவீத தேர்ச்சி * மாநில அளவில் 36வது இடம் பிடித்தது * மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகம் திருவண்ணாமலை மாவட்டம் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Thiruvannamalai district ,government ,Tiruvannamalai district ,
× RELATED மொபட் மீது டிராக்டர் மோதி நிறைமாத...