×

செய்யாறு அருகே வடமாநில வாலிபரை கத்தியால் குத்தி வழிப்பறி ஒருவர் கைது, நண்பருக்கு வலை

செய்யாறு, அக். 25: மேற்குவங்க மாநிலம் நபியா மாவட்டம், பாராக்கண்ட்கார் தாலுகா, சோட்டா சண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் மண்டல். இவரது மகன் அப்துல் காலிக் மண்டல் (22), இவர் செய்யாறு அருகே உள்ள பாவூரில் கல்குவாரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதியம் சுமார் 2 மணி அளவில் மாங்கால் கூட்ரோட்டிற்கு வந்து தனக்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு பாவூர் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் அப்துல் காலிக் மண்டலிடம் கத்தியை காட்டி உன்னிடம் இருக்கும் பணம், செல்போனை தரும்படி கேட்டு வழிப்பறி செய்துள்ளனர்.

பணம் கொடுக்க மறுத்ததால் மர்ம நபர்கள் அப்துல்காலிக் மண்டலை கத்தியால் கிழித்து காயப்படுத்தி உள்ளனர். இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதைப் பார்த்து மர்ம நபர்கள் பைக்கில் தப்பி சென்றனர்‌.
காயமடைந்த அப்துல் காலிக் மண்டல் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், வடமாநில வாலிபரிடம் வழிப்பறி செய்த மாத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் அன்பழகன்(21) என்பவரை போலீசார் நேற்று மாலை கைது செய்து, அவரிடம் இருந்த பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான இவரது நண்பர் சஞ்சய்(21) என்பவரை தேடி வருகின்றனர்.

The post செய்யாறு அருகே வடமாநில வாலிபரை கத்தியால் குத்தி வழிப்பறி ஒருவர் கைது, நண்பருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : North State ,Seyyar ,Zakir Hussain Mandal ,Chota Chandi ,Barakandgar Taluk, Nabia District, West Bengal ,Abdul Khaliq Mandal ,Bhavoor ,
× RELATED மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி பலி