- பாகிஸ்தான்
- அமித்
- குந்தி
- மத்திய உள்துறை அமைச்சர்
- அமித் ஷா
- பாக்கிஸ்தான்
- காஷ்மீர்
- இந்தியா
- பாஜக
- குந்தி, ஜார்கண்ட்
- மணிசங்கர்
குந்தி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அதன் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்கு சொந்தமானது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜார்கண்டின் குந்தியில் நடந்த பாஜ பிரசார கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,‘‘மணி சங்கர் அய்யர் பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளது மரியாதை கொடுங்கள் என்கிறார். சில நாட்களுக்கு முன்பு இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர் பரூக் அப்துல்லா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பேசாதீர்கள் பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளது என்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு என்ன ஆனது என்று எனக்கு தெரியவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்று நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அணுகுண்டு பற்றி பேசி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீ் குறித்து காங்கிரஸ் கேள்விக்குறியை எழுப்புகின்றது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது என்ற பாஜவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. அதன் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்கு சொந்தமானது. எந்த சக்தியாலும் அதனை பறிக்க முடியாது” என்றார்.
The post பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது: அமித் ஷா திட்டவட்டம் appeared first on Dinakaran.