×

ஒன்றிய அரசின் வெங்காய ஏற்றுமதி அனுமதியால் விலை மேலும் உயரும் அபாயம்

திருப்பூர், மே 10: ஒன்றிய அரசு 5 மாதங்களுக்கு பிறகு 6 நாடுகளுக்கான வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. இந்தியாவில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு கடந்த டிசம்பர் மாதம் முதல் மார்ச் 31 வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. விலைவாசியை தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்க ஏற்றுமதிக்கான தடை நீடிக்கப்பட்டு இருந்தது. ஆனால் குஜராத் மற்றும் கர்நாடக மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுவதை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு மே 4ம் தேதி முதல் வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது.

இந்தியாவில் இருந்து 99,150 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவால் தற்போது நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரிக்க துவங்கி உள்ளது. திருப்பூர் தென்னம்பாளையம் தினசரி சந்தையில் கடந்த வாரம் வரை கிலோ 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த வெங்காயம் நேற்றைய தினம் 25 ரூபாய் முதல் 27 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

The post ஒன்றிய அரசின் வெங்காய ஏற்றுமதி அனுமதியால் விலை மேலும் உயரும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Union government ,Tirupur ,India ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த...