×
Saravana Stores

திருப்போரூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நாடகம்

திருப்போரூர், மே 9: திருப்போரூர் பேரூராட்சி பகுதி மக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நாடகம் ஏற்படுத்தப்பட்டது. திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுமார் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மூலம் வீடு, கடைகள், வர்த்தக நிறுவனங்களில் இருந்து கழிவுகள், குப்பைகள் பெறப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு உரமாக மாற்றப்படுகிறது. இருப்பினும், பல இடங்களில் பொதுமக்கள் பலரும் குப்பைகளை சாலைகளிலும், தங்களது வீடுகளின் முன்பும் கொட்டி வைக்கின்றனர். இதனால், பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் சென்னை பவானி கலைக்குழு மற்றும் கணேஷ் நாடக குழு சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடனம் மற்றும் நாடகம் நடித்து காட்டப்பட்டது. இதில், சுகாதார பணியாளர்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல், பிளாஸ்டிக் பைகளை தவிர்த்தல், கடைகளுக்கு செல்லும்போது துணிப்பை எடுத்து செல்லுதல், கோடை காலத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், மாதந்தோறும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

The post திருப்போரூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நாடகம் appeared first on Dinakaran.

Tags : Tiruporur ,Tiruppurur ,
× RELATED ஆங்கில பாடம் புரியாததால் பொறியியல்...