- ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி
- தாசம்பாளையம்
- கோபி
- ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா உயர்நிலைப் பள்ளி
- ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
- தின மலர்
கோபி, மே 9: கோபி அருகே தாசம்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 12-ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவி விகாஷினி 600க்கு 590 மதிப்பெண்களும், மாணவர் பரணிதரன் 600க்கு 586 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2மிடமும் பிடித்துள்ளார். அதேபோன்று மாணவர் நந்தா இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய நான்கு பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களில் 590க்கு மதிப்பெண்களுக்கு மேல் ஒருவரும்,580 மதிப்பெண்களுக்கு மேல் 6 பேரும், 570 மதிப்பெண்களுக்கு மேல் 15,பேரும் 560 மதிப்பெண்களுக்கு மேல் 21,பேரும் 550 மதிப்பெண்களுக்கு மேல் 30 பேரும்,500 மதிப்பெண்களுக்கு மேல் 82 பேரும் பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவர்களில் இயற்பியல் 4 பேரும், வேதியியல் மற்றும் உயிரியலில் தலா 3 பேரும், கணினி அறிவியலில் 2 பேரும், கணிதத்தில் 9 பேரும், பொருளியல் மற்றும் வணிகவியலில் தலா 4 பேரும், கணக்குப்பதிவியல், கணினி பயன்பாடுகள் மற்றும் வேலை வாய்ப்புத் திறன் பாடத்தில் தலா 2 பேரும், அடிப்படை இயந்திரவியலில் 4 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதேபோன்று பொறியியல் கட் ஆப்பில் 200 க்கு 200 மதிப்பெண்களை ஒருவரும், 199க்கு மேல் 5 பேரும், 190க்கு மேல் 16 பேரும், 185க்கு மேல் 19 பேரும், 180 க்கு மேல் 25 மாணவர்களும் பெற்றுள்ளனர். பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை கல்வி நிறுவனங்களின் தலைவர் முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணன், பள்ளியின் செயலாளர் ஜி.பி. கெட்டிமுத்து, அறக்கட்டளை தலைவர் வெங்கடாசலம், ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி இயக்குனர்கள் முருகசாமி, செங்கோட்டையன் ஜோதிலிங்கம், ராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post கோபி அருகே தாசம்பாளையத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளி மாணவர்கள் 12-ம் வகுப்பு தேர்வில் மாவட்ட அளவில் சாதனை appeared first on Dinakaran.