- திருப்பூர்
- Madhusudhanan
- குமார்
- பாலதண்டபாணி
- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக் குழு
- மாவட்ட கலெக்டர்
- கிறிஸ்தராஜ்
- திருப்பூர் மாவட்டம்
- வடமேற்கு
திருப்பூர், மே 9: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட குழு தலைவர் மதுசூதனன், செயலாளர் குமார் மற்றும் பொருளாளர் பாலதண்டபாணி ஆகியோர் நேற்று மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் வடமேற்கு மற்றும் தென்கிழக்கு பருவமழை பொய்த்து போனதால், பிஏபி தொகுப்பு அணைகளில் போதுமான நீர் இருப்பு இல்லாலை. இதனால் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் செய்துள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான வெயிலுக்கு தென்னைகள் தாக்கு பிடிக்க முடியாமல் ஆயிரக்கணக்கிலான ஏக்கரில் காய்ந்து வருகிறது. மக்காச்சோளம் உள்ளிட்ட தீவனப்பயிர்களும் மற்றும் வெங்காயம் உள்ளிட்ட காய்கறி பயிர்களும் வறட்சியை சமாளிக்க முடியாமல் மடிந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தேங்காய் உள்ளிட்ட விவசாயிகள் உற்பத்தி பொருட்களுக்கு கட்டுபடியான விலை கிடைக்காத சூழலில், தற்போது கடும் வறட்சியால் பாதிப்பு உருவாகி உள்ளது. விவசாயிகள் வைத்துள்ள கால்நடைகளுக்கு போதுமான தீவனம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வறட்சியால் ஏற்பட்டிருக்கும் நிலைமைகளை போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் உடனடியாக ஆய்வு செய்து உரிய இழப்பீடுகளை வழங்குவதோடு உரிய மாற்று ஏற்பாடுகளை செய்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர். சென்னை, மே 8: தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 8.08 சதவீதம் முதல் 10.69 சதவீதம் வரை உயரும் எனவும், இந்திய சராசரி பொருளாதார வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமாக நிகழ்வதாகவும் என, சி.ரங்கராஜன் மற்றும் கே.ஆர்.ரங்கராஜன் மற்றும் கே.ஆர்.சண்முகம் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்ற வேண்டும் என்ற குறிக்கோளோடு, 2030 ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் (₹83 லட்சம் கோடி) அளவுக்கு உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்கேற்ப துறை தோறும் முதலீடுகள், தொழில்நுட்ப வளர்ச்சிகள், உள் கட்டமைப்பு மேம்பாடுகளை சாத்தியமாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதவிர, சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஏதுவாக, உலக முதலீட்டாளர் மாநாட்டை கடந்த ஜனவரியில் தமிழ்நாடு அரசு நடத்தியது. 2 நாள் மாநாட்டிலேயே ₹6,64,180 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. இதன்மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 26.9 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதுபோல் கடந்த பிப்ரவரியில் ஸ்பெயின் நாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ₹3,440 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்திருக்கின்றன.தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகளை இவை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. இதற்கேற்ப தமிழ்நாட்டின் பொருளாதாரம் நடப்பு 2024-25 நிதியாண்டில் 8.08 சதவீதம் முதல் 10.69 சதவீதம் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில பொருளாதாரம் குறித்து ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் மற்றும் மெட்ராஸ் ஸ்கூல் எகனாமிக்ஸ் தலைவர் மற்றும் இயக்குநர் கே.ஆர்.சண்முகம் ஆகியோர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2023-24 நிதியாண்டில், மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 8.08 சதவீதம் முதல் 9.44% வரை இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதே நிதியாண்டில் நாட்டின் சராசரி பொருளாதார வளர்ச்சியானது 7.3 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், நாட்டின் சராசரியை விட வேகமான பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு எட்டியுள்ளது இந்த ஆய்வறிக்கையின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. கடந்த 2006 -2011 கலைஞர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு 10.3 சதவீதம் என்ற வலுவான பொருளாதார வளர்ச்சியை எட்டியது. பின்னர் 10 ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் இத 6.21 சதவீதமாக வீழ்ந்தது. இந்நிலையில் தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மீண்டும் வளர்ச்சிப்பாதையில் பயணிப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்தபோதிலும், தமிழ்நாடு இதர பெரிய மாநிலங்களவை விடவும் வளர்ச்சி அடைந்துள்ளதைக் காண முடிகிறது என ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பணவீக்கம், வேலைவாய்ப்பு, கடன் கிடைப்பது, சமூக அளவீடுகள் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட மாநிலப் பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்களை விளக்கியுள்ள இந்த ஆய்வறிக்கை, இரட்டை இலக்க வளர்ச்சியை அடைவதற்கான திறன் மாநிலத்திற்கு உள்ளது. 2021-22 முதல் 2022-23 வரை மாநிலத்தின் சராசரி ஆண்டு பொருளாதார வளர்ச்சி 8% ஆக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு செயல்பாடுகள் மாநில முன்னேற்றத்துக்கு எந்த அளவுக்கு உதவியுள்ளது என்பது இந்த அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள். முதலீடுகள், வேலை வாய்ப்புகள், உற்பத்தி திறன் அதிகரிக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் வளர்ச்சியின் வேகத்தையும், நிலைத்தன்மையையும் உறுதிப்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.
வரும் ஆண்டுகளில் இந்த வளர்ச்சி வேகத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது மிகவும் அவசியமானது. எனவே, வேறு பல புற காரணங்களால் மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் மூலதனச் செலவினங்களை அதிகரித்தல், நிதி சலுகைகளை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். 12வது நிதிக்குழு பரிந்துரைத்துரைத்தபடி, கடன் ஒருங்கிணைப்பு மற்றும் நிவாரணத் திட்டங்கள், கடனைத் தள்ளுபடி செய்வதற்கான திட்டங்கள் குறித்து 16வது நிதிக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது.
The post மாவட்டத்தில் வறட்சி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் appeared first on Dinakaran.