×
Saravana Stores

வீரபாண்டி சித்திரைத் திருவிழா: அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

தேனி, மே. 9: தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் பக்தர்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஆண்டு தோறும் சித்திரை மாத இறுதி வாரம் எட்டு நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இவ்விழாவில் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இத்தகைய சிறப்பு வாய்ந்த வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நேற்று முன்தினம் (மே 7) தொடங்கியது.

இதனையடுத்து, அதிகாலை முதலாக அம்மனை வேண்டி பிரார்த்தனை செய்தவர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதைத் தொடர்ந்து நன்றிக்கடன் செலுத்தும் வகையில் அக்னிசட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், மாவிளக்கு ஏற்றுதல், அங்கபிரதட்சணம் செய்தல், அலகு குத்துதல் என பல்வேறு வகையான நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்காக கோயிலில் குவியத் துவங்கினர். பகல் நேரத்தில் கடும் வெயில் காரணமாக பக்தர்கள் கூட்டம் சற்றே குறைவாக காணப்பட்டது. இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்ததால் வீரபாண்டி பைபாஸ் பிரிவு முதல் கோயில் வரை பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மாலை நேரத்தில் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பலரும் அக்னிச்சட்டி எடுத்து வந்தனர். பலர் காவடி எடுத்தும், சேற்றை பூசியும், முடிகாணிக்கை செலுத்தியும் தங்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோயில் வளாகத்தில், தனியார் மூலம் பொழுதுபோக்கு அம்சங்களான ராட்டினங்கள், பனிப்பிரதேசம், செயற்கை வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அம்மனை வழிபட வந்த பக்தர்கள் வழிபாடு முடிந்ததும், குடும்பத்தினருடன் அங்கு சென்று விளையாடி மகிழ்ந்தனர். இதனால் அப்பகுதியிலும் கூட்டநெரிசல் மிகுந்து காணப்பட்டது.

The post வீரபாண்டி சித்திரைத் திருவிழா: அலைமோதிய பக்தர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Veerapandi Chitra Festival ,Aalymothiya Devotees Gathering ,Teni ,Kaumariamman Temple Chitrit Festival ,Weerabandi ,Chitri ,Kaumariyamman Temple Chitrit Festival ,Theni ,Veerapandi Chitra Festival: Aalymothiya Devotees Gathering ,
× RELATED சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைப்...