- ஷர்மிளா
- பிரதமர் மோடி
- திருமலா
- ஆந்திர பிரதேச காங்கிரஸ் கட்சி
- ஜனாதிபதி
- வைஎஸ் ஷர்மிலா
- கடப்பா
- நரேந்திர மோடி
- வலாசல்
திருமலை: ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா கடப்பாவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் பிடித்தது மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் ரேடியோவில் பேசுவது. எனவே அவருக்கு ரேடியோவை பரிசாக அனுப்பி 10 கேள்விகள் ஆந்திர மாநில மக்கள் சார்பில் கேட்கிறேன். இது ஆந்திர மக்களின் மன் கி பாத். இதை கேளுங்கள் பிரதமர் மோடி அவர்களே. நீங்கள் மாநிலத்திற்குள் நுழைய தகுதியற்றவர். முதலில் ஆந்திர மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள். 10 ஆண்டுகளாக அரசை ஏமாற்றி, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற ஆந்திர மக்களின் மீது அன்பு காட்டுவது போன்று நடிக்க வேண்டாம். இத்தனை முறை தேர்தலுக்காக வந்த நீங்கள் எப்போதாவது மாநில வளர்ச்சிக்காக வந்திருக்கிறீர்களா. உங்களுக்கு தைரியமிருந்தால், ஆந்திர மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை இப்போது நிறைவேற்றுவேன் என்று பிரமாணப் பத்திரம் எழுதி கொடுங்கள். இவ்வாறு அவர் கூறினார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, போலாவரம் திட்டம், விசாகபட்டினம் உருக்காலை தனியார்மயம், ஊழல் ஆட்சி செய்யும் ஜெகன் மோகன் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது உள்ளிட்ட 10 கேள்விகளை சர்மிளா எழுப்பி இருந்தார்.
The post ‘ஆந்திர மக்களின் மன் கி பாத்தை கேளுங்கள்’ பிரதமர் மோடிக்கு 10 கேள்விகளுடன் ரேடியோ பரிசு அனுப்பிய ஷர்மிளா: 10 ஆண்டுகளாக ஏமாற்றிவிட்டு நடிக்க வேண்டாம் என விளாசல் appeared first on Dinakaran.