- போர்டோ
- திருப்பூர்
- ஆட்ரி அர்பிதா
- மோகனப்பிரியா
- மர்னி சஹாஜா
- சிவாஜா
- காயத்ரி
- கவி பாரதி
- ஜோஷிதா
- லக்ஷிகா
- மீனாட்சி
- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
- கோயம்புத்தூர்
திருப்பூர், மே 8: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இறுதி ஆண்டு படித்து வரும் ஆட்ரே அர்பிதா, மோகன பிரியா, மர்னி சஹாஜா, சிவாஜா, காயத்ரி, கவி பாரதி, ஜோஷிதா, லக்ஷிகா, மீனாட்சி ஆகிய 9 பேர் கொண்ட குழுவினர் பொங்கலூர் வட்டாரத்தில் கிராமப்புற வேளாண் அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த குழுவினர் போர்ட்டோ கலவையின் செய்முறை குறித்த செயல் விளக்கம் அளித்தனர். இது பழம் அழுகல், இலை கருகல், பழவெடிப்பு, அடிச்சாம்பல் நோய், மேல் சாம்பல் நோய் நோய்களை கட்டுப்படுத்த உதவும். நுத்தம், சுண்ணாம்பு, நீர் ஆகியவற்றை 1:1:10 கலந்து தயாரிப்பது போர்டோ கலவை ஆகும். இது தொடர்பாக விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டு மேலும் அவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.
The post விவசாயிகளுக்கு போர்ட்டோ கலவை பயிற்சி appeared first on Dinakaran.