×
Saravana Stores

கொடுமுடி வட்டாரத்தில் வேளாண்மை கல்லூரி மாணவர்கள்: விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்

 

கொடுமுடி, மே 8: வேளாண்மை கல்லூரி மாணவர்கள் பயோ சூப்பர் பற்றி செயல்முறை விளக்கம் அளித்தனர். பொள்ளாச்சி மணக்கடவு வாணவராயர் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராம தங்கல் திட்டம் மூலம் கிராமத்தில் தங்கி அங்குள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடி விவசாயம் சார்ந்த நிறை குறைகள் பற்றி கேட்டறிந்தனர். கொடுமுடி வட்டாரத்தில் உள்ள இச்சிப்பாளையம் கிராமத்தில் பயோ சூப்பர் பற்றிய செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில், கிராமத்தில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டனர். பயிருக்கு பயோ சூப்பர் அளிக்கும் பொழுது பயிரின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். மண்ணில் உள்ள நுண்ணுயிர் பெருக்கம் அடையும். பயிரின் சாய்தல் தன்மையை குறைக்கும். இது போன்ற பயோ சூப்பரின் நன்மைகள் குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது.

The post கொடுமுடி வட்டாரத்தில் வேளாண்மை கல்லூரி மாணவர்கள்: விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் appeared first on Dinakaran.

Tags : College of Agriculture ,Kodumudi ,Agriculture College ,Pollachi Manakadau Vanavarayar College of Agriculture ,
× RELATED கொடுமுடியில் நெடுஞ்சாலை பணி ஆய்வு