×

பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்

கடலூர், மே 8: கடலூர் முதுநகரில் பாமக நிர்வாகியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பாமகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் முதுநகர் பழைய போலீஸ் லைனை சேர்ந்தவர் நாகப்பன் மகன் சுரேஷ். பாமக நிர்வாகியான இவருக்கு சமூக ஊடக பிரிவு நகர தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுரேஷ், முதுநகர் சாக்கு கடை தெரு 4 முனை சந்திப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுத்துக்குளம் பகுதி சேர்ந்த பாமக உறுப்பினர்களான சூர்யா, ஜெகன், மணி, கார்த்திக் ஆகியோர் சுரேஷிடம் எங்களுக்கு கட்சியில் பதவி கொடுக்காமல் உனக்கு மட்டும் எப்படி கொடுத்தார்கள் என்று கேட்டு, அவரை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சூர்யா, ஜெகன், மணி, கார்த்தி ஆகியோர் மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : BMC ,Cuddalore ,BAMA ,Nagappan ,Suresh ,Muthunagar ,Bamaka… ,Bamaka ,Dinakaran ,
× RELATED சூடுபிடிக்கும் விக்கிரவாண்டி...