- கட்டவாக்கம் ஊராட்சி
- வாலாஜாஹாபாத்
- கலாச்செல்வி மோகன்
- கலாச்செல்வி மோகன்
- கட்டவாக்கம் ஊராட்சி
- Walajabad
- காஞ்சிபுரம் மாவட்டம்
- தின மலர்
வாலாஜாபாத்: கட்டவாக்கம் ஊராட்சியில் உள்ள, திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தை கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்டவாக்கம் ஊராட்சியில் திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேரில் பார்வையிட்டார். பின்னர், அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டை ஆய்வு செய்து நெல் சேமிப்பு மைய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், கோடை மழை பெய்தால் நெல் மூட்டைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் தார்ப்பாய்கள் கொண்டு முழுமையாக மூடி வைக்க வேண்டும். நெல் மூட்டைகளில் இருந்து நெல் கசிவுகள் ஏற்பட்டால் அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து, திறந்தவெளி நெல் சேமிப்பு மைய அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார். பின்னர், திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்திற்கு அருகில் 3000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 5 சேமிப்பு கிடங்குகள் கட்டப்படுவதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அருள்வனிதா, உதவி மேலாளர் ஜெயவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post கட்டவாக்கம் ஊராட்சியில் நெல் சேமிப்பு மையத்தை கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.