×
Saravana Stores

இடஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை பாஜக அதிகரிக்குமா?: பிரதமர் மோடிக்கு காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சவால்

டெல்லி: எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினரின் இடஒதுக்கீட்டுக்கான 50 சதவிகித உச்சவரம்பை பாஜக அதிகரிக்குமா? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சவால் விடுத்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், இடஒதுக்கீடு தொடர்பாக நரேந்திர மோடி தொடர்ந்து பொய்களை பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார். இஸ்லாமியர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டே மாநில அரசுகள் இட ஒதுக்கீடு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினரின் இடஒதுக்கீட்டுக்கான 50 சதவிகித உச்சவரம்பை அதிகரிப்போம் என காங்கிரஸ் உறுதி அளித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் இடஒதுக்கீடு குறித்து பேசும் மோடி, இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை 50 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க முன்வருவரா? எனவும் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். ஜூன் 4ம் தேதி நரேந்திர மோடி முன்னாள் பிரதமராகிவிடுவார் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற முடியாது என்பது மோடிக்கு தெரியும் என்றும் அதனாலேயே மோடி இவ்வாறு பேசி வருவதாகவும் தெரிவித்தார்.

The post இடஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை பாஜக அதிகரிக்குமா?: பிரதமர் மோடிக்கு காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சவால் appeared first on Dinakaran.

Tags : BJP ,PM Modi ,Secretary General ,Jairam Ramesh ,Delhi ,S. C. ,S. D. ,O. B. C. ,Congress ,Modi ,Narendra Modi ,Jairam Ramesh Chawal ,
× RELATED நாடு ‘விக்சித் பாரத்’ என்ற இலக்குடன்...