- செயின்ட் ஜான்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி
- திருநன்னாவூர்
- திருவள்ளூர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
- திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டம்
- மாணவர்
- ஏ. பாலாஜி
திருவள்ளூர்: தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். மாணவர் ஏ. பாலாஜி – 588 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ் – 98, ஆங்கிலம் – 94, இயற்பியல் – 100, வேதியியல் – 98, உயிரியல் – 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
அதேபோல் மாணவி ஆர்.தனுஸ்ரீ – 587 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் 2வது இடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழ் – 98, ஆங்கிலம் – 97, இயற்பியல் – 97, வேதியியல் – 98, தாவரவியல் – 97, கணக்கு – 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதேபோல் மாணவி எஸ்.ஹர்ஷினி – 577 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் 3ம் இடத்தை பிடித்துள்ளார். இவர் தமிழ் – 96, ஆங்கிலம் – 88, பொருளாதாரம் – 98, வணிகவியல் – 100, அக்கவுண்டன்சி – 97, பிசினஸ் கணக்கு – 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் குளோரி ஜான்சன், பள்ளி தலைவர் ஒய்.ஜான்சன், துணைத் தலைவர் வின்ஸ்லி, மூத்த முதல்வர் ஜாஸ்மின் சுஜா, முதல்வர்கள் ஷீஃபா ஜெனிமலர், நியூஜிலின் ஜெபா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
The post திருநின்றவூர் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.