- ஜகன் மோகன்
- காங்
- ஜனாதிபதி
- ஷர்மிளா
- திருமலா
- காங்கிரஸ்
- மாநில தலைவர்
- நிலை
- கடப்பா, ஆந்திரா
- ஷர்மிளா பாட்டி
- தின மலர்
திருமலை: ரூ.1000 கோடி அரசு கான்ட்ராக்ட் கேட்டு தராததால் ஜெகன்மோகனுக்கு எதிராக செயல்படுவதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர் என்று காங்கிரஸ் மாநில தலைவர் ஷர்மிளா தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் ஷர்மிளா, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணா மற்றும் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் னிவாஸ் ஆகியோருடன் இணைந்து நேற்று பேட்டியளித்தார். அப்போது ஷர்மிளா கூறியதாவது: ஆந்திர மாநிலத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லும் சக்தி காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணியால் மட்டுமே சாத்தியமாகும். இந்நிலையில் முதல்வர் ஜெகன்மோகன் வீசும் நாய் பிஸ்கட் சாப்பிட்ட சிலர், நான் ரூ.1000 கோடி அரசு கான்ட்ராக்ட் ஒப்பந்தங்கள் கேட்டு தராததால் அவருக்கு எதிராக செயல்படுவதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். முதல்வர் ஜெகன் ஒய்எஸ்ஆரின் வாரிசு என்பதை விட பிரதமர் மோடியின் வாரிசாக செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
The post ரூ.1000 கோடி டெண்டர் தராததால் ஜெகன்மோகனை எதிர்க்கிறேனா? காங். மாநில தலைவர் ஷர்மிளா பேட்டி appeared first on Dinakaran.