×

நீட் வினாத்தாள் கசிவு என்பது வதந்தி: தேர்வு முகமை

டெல்லி: இளநிலை மருத்துவப் படிப்பு நீட் வினாத்தாள் கசிந்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் வினாத்தாளுக்கும் உண்மையான வினாத்தாளுக்கும் தொடர்பில்லை. NEET -UG வினாத்தாள் சமூகவலைதளத்தில் கசிந்ததாக கூறப்படும் அறிக்கைகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் தெரிவித்துள்ளது. தேர்வு மையத்தின் நுழைவாயிலை மூடிய பிறகு யாராலும் உள்ளே வர முடியாது எனவும் NTA விளக்கம் அளித்துள்ளது.

The post நீட் வினாத்தாள் கசிவு என்பது வதந்தி: தேர்வு முகமை appeared first on Dinakaran.

Tags : Delhi ,National Examinations Agency ,NEET ,Medical ,Dinakaran ,
× RELATED டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை...