- திருப்பூர்
- குடிசார் சப்ளைஸ் குற்றவியல் புலனாய்வுத் துறை
- ராக்கியாபாளையம்
- கணியாம்பூண்டி
- இன்ஸ்பெக்டர்
- துளசிமணி
- ரைசன்
- தின மலர்
திருப்பூர், மே 6: திருப்பூர் ராக்கியாபாளையத்திலிருந்து கணியாம்பூண்டி செல்லும் ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்தில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் துளசிமணி, வழிகாட்டுதலில் எஸ்ஐ பொன் குணசேகரன், கிருஷ்ணன் ஆகியோர் ராக்கியாபாளையத்திலிருந்து கணியாம்பூண்டி செல்லும் ரோட்டில் உள்ள வீட்டில் சோதனை செய்தனர்.
அப்போது, அங்கு அரசால் இலவசமாக வழங்க கூடிய 1,070 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, அந்த வீட்டில் இருந்தவரிடம் போலீஸ் விசாரணை நடத்தினர். இதில் அவர் திருப்பூர், டூம்லைன் மைதானம் பகுதியை சேர்ந்த சிவமணி (34) என்பதும் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசிகளை வாங்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு வடமாநிலத்தவர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 1.070 கிலோ ரேசன் அரிசி, இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
The post ரேசன் அரிசி பதுக்கியவர் கைது appeared first on Dinakaran.