×

சுட்டெரிக்கும் வெயிலினால் பெரியசடையம்பாளையம் குளத்தில் நீர் இருப்பு குறைய துவங்கியது

 

ஈரோடு,மே6: ஈரோட்டில் சுட்டெரிக்கும் வெயிலினால் பெரியசடையம்பாளையம் குளத்தில் இருப்பு இருந்த தண்ணீர் குறைய துவங்கி, பாறைகள் வெளியே காட்சியளிக்கிறது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியசடையம்பாளையத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் மழை நீர் சேகரிப்பு குளம் உள்ளது. குளத்திற்கு சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழைநீரும், கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீரும் சேகராமாகும்.

இந்த குளத்தின் மூலம் காசிபாளையம், மூலப்பாளையம், நடார்மேடு, சாஸ்திரிநகர், ரகுபதி நாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கும், விவசாய விளைநிலங்களுக்கும் இந்த குளம் பயனுள்ளதாக இருந்து வருகிறது. மேலும், இந்த குளத்தில் தண்ணீர் தேங்க வசதியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் 50 ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டு, தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்டதாலும், மழை பெய்யாததாலும் பெரியசடையம்பாளையம் குளத்திற்கு நீர் வரத்து முற்றிலும் சரிந்தது. மேலும், சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக குளத்தில் இருப்பு இருந்த சிறிதளவு தண்ணீரும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கி,தற்போது, குளத்தில் உள்ள பாறைகள் வெளியே காட்சியளிக்கறிது. இதனால், சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது.

The post சுட்டெரிக்கும் வெயிலினால் பெரியசடையம்பாளையம் குளத்தில் நீர் இருப்பு குறைய துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Periyasadayampalayam ,Erode ,Periyasadayampalayam pond ,Erode Corporation ,Dinakaran ,
× RELATED நாகதேவம்பாளையம் ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா