- Kummidipoondi
- ஆந்திரப் பிரதேசம்
- கர்நாடக
- பீகார்
- ஒரிசா
- ஜார்க்கண்ட்
- மத்தியப் பிரதேசம்
- ராஜஸ்தான்
- டச்சூர்
- திருவள்ளூர் மாவட்டம்
- தின மலர்
கும்மிடிப்பூண்டி, மே 6: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தச்சூர் கூட்டு சாலை வழியாக ஆந்திர, கர்நாடக, பீகார், ஒரிசா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சரக்கு லாரிகள் அதிகளவில் சென்று வருகின்றன. இதன் காரணமாக கும்மிடிப்பூண்டி-தச்சூர் சாலையில் கனரக வாகன போக்குவரத்து மிகுந்து பரபரப்புடன் காணப்படும்.
இந்நிலையில், சென்னை துறைமுகத்தில் இருந்து லாரி ஒன்று இரும்பு மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு புது கும்மிடிப்பூண்டியில் உள்ள இரும்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தது. லாரியை திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன்(48) ஓட்டிச் சென்றார். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை வழியாக சென்றபோது லாரியின் முன்பக்க டயர் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த லாரியை கணேசன் உடனடியாக செயல்பட்டு நிறுத்தினார்.
இதனிடையே லாரி கேபினின் உள்ளே இருந்து குபுகுபுவென புகை சூழ்ந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கணேசன் லாரியில் இருந்து கீழே குதித்தார். அடுத்த சில நொடுகளில் லாரியின் டீசல் டேங்க் வெடித்து லாரி முழுவதும் தீ பரவியது. இதையடுத்து கணேசன் அவசர உதவி எண் 100 தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், கவரப்பேட்டை போலீசார் விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் தகவல் அறிந்து வருவதற்கு முன்பாக லாரி முழுவதும் எரிந்து எலும்புக் கூடாக காட்சியளித்தது. இதுதொடர்பாக கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post கும்மிடிப்பூண்டி அருகே டயர் வெடித்ததில் டீசல் டேங்க் தீப்பிடித்து லாரி எரிந்து நாசம் appeared first on Dinakaran.