- பவானியம்மன் கோயில்
- Uthukkottai
- பவானி
- அம்மன் கோயில்
- சென்னை
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- ஆந்திரப் பிரதேசம்
- கேரளா
- கர்நாடக
- பவானி அம்மன் கோயில்
ஊத்துக்கோட்டை, மே 6: பவானி அம்மன் கோயிலுக்கு அதிகளவில் வந்த பக்தர்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ், வேன், ஜீப், லாரி, ஆட்டோ, மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.
அவ்வாறு வரும் பக்தர்களுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, மூலக்கடை, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அரசு பஸ்கள், மாநகர பஸ்கள், தனியார் பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று சித்திரை ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கொண்டு வந்த வாகனங்கள் அதிகமாக காணப்பட்டது.
இதனால் பெரியபாளையம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், மற்ற நாட்களில் காலையும், மாலையும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post பவானியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.