வாலாஜாபாத், மே 6: வாலாஜாபாத் பேரூராட்சியில், தினகரன் நாளிதழ் செய்தி எதிரொலியாக மினி மோட்டார் டேங்க் பயன்பாட்டிற்கு வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சி இங்கு 15 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், பேரூராட்சியில் வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் வாலாஜாபாத் பேரூராட்சி சிவன்படை வீதி, கரிகாரத் தெரு, என்.என் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 15வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் மினி மோட்டார் டேங்க் பொருத்தப்பட்டன. இருப்பினும் ஒரு மாத காலம் ஆகியும், இதனால் வரை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
குறித்து தினகரன் நாளிதழில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு படத்துடன் செய்தி வெளியாகின இதனை அடுத்து வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற தலைவர் இல்லா மல்லிஸ்ரீதர் உத்தரவின் பேரில் ஊழியர்கள் உடனடியாக மினி மோட்டார் டேங்கிற்கு மின் இணைப்பை வழங்கி கோடை காலத்திற்கு முன்பு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமின்றி தினகரன் நாளிதழுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
The post வாலாஜாபாத் பேரூராட்சியில் பயன்பாட்டிற்கு வந்த மினி மோட்டார் டேங்க் appeared first on Dinakaran.