- ஆந்திர டி.ஜி.பி
- தேர்தல் ஆணையம்
- திருமலா
- ஆந்திர மாநில டி.ஜி.பி
- ஆந்திரப் பிரதேசம்
- டிஜிபி
- பாஜக
- தெலுங்கு
- கமிஷன்
- தின மலர்
திருமலை: ஆந்திர மாநில டிஜிபியை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆந்திராவில் வரும் 13ம் தேதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக மாநில டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளரை மாற்ற வேண்டும் என பாஜக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் ஆந்திர மாநில டிஜிபி ராஜேந்திரநாத்தை உடனடியாக பணியில் இருந்து நீக்கி உள்ளது. அந்த பதவிக்கு தகுதியான மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை பரிந்துரை செய்யும்படி மாநில தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 6 ஐபிஎஸ் அதிகாரிகள், 3 ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்தல் முடியும் வரை தேர்தல் தொடர்பான பணியில் இருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.
The post ஆந்திர மாநில டிஜிபி நீக்கம்: தேர்தல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.