×
Saravana Stores

பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதிையயொட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வனவிலங்குகள் நடமாட்டம்: பீதியில் பொதுமக்கள்

 

கூடலூர், மே 5: தமிழக எல்லை குமுளி பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியை உட்டி உள்ள குடியிருப்பு பகுதிக்குள் காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்கு நுழைவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். தமிழக கேரள எல்லையில் 925 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், கேரள மாநிலத்தின் இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் பெரியாறு புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது.

இதில் புலி, சிறுத்தை, மான், கரடி, யானை போன்ற நூற்றுக்கணக்கான வன விலங்குகளும், அரியவகை பறவையினங்களும் உள்ளன. சர்வதேசப்புகழ் பெற்ற தேக்கடி சுற்றுலாத்தலமும், பெரியாறு அணையும், கண்ணகி கோவிலும் இந்த சரணாலயப்பகுதியில் அமைந்துள்ளது.

இதில் பெரியாறு புலிகள் சரணாலயத்தை ஒட்டியுள்ள குடியிருப்புகளான தேக்கடி ஷட்டர், தாமரகண்டம், ரோஜாப்பூ கண்டம் போன்ற குடியிருப்பு பகுதிகளுக்கு காட்டு மாடு, மான்கள் உள்ளிட்டவனவிலங்குகள் அடிக்கடி வந்து செல்கின்றன. தொடர்ந்து வீட்டின் அருகிலும், விவசாய நிலங்களுக்கும் வரும் வனவிலங்குகளால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் கூடலூர் வனவர் பூபதி, வேட்டை தடுப்பு காவலர் சுமன் ஆகியோரை வண்ணாத்திப்பாறை அருகே காட்டுமாடு முட்டியதில் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

The post பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதிையயொட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வனவிலங்குகள் நடமாட்டம்: பீதியில் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Periyar Tiger Sanctuary ,Cuddalore ,Tamil Nadu ,Kumuli ,Utti ,Kerala ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 11 பேருக்கு டெங்கு