- விமானப்படை சோதனை
- ஆந்திரப் பிரதேசம்
- பவன் கல்யாண்
- திருமலா
- பறக்கும் அணி
- பவன் கல்யாண்
- சட்டசபை
- பாராளுமன்ற
- ஆந்திரா
- தின மலர்
திருமலை: நடிகர் பவன் கல்யாண் போட்டியிடும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடத்தில் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் ₹17 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் வரும் 13ம் தேதி சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில், காக்கிநாடா மாவட்டம் பித்தாபுரம் சட்டமன்ற தொகுதியில் நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் போட்டியிடுகிறார். இங்கு ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் வன்கா கீதா போட்டியிடுகிறார்.
நேற்று அதிகாலை பித்தாபுரம் தொகுதிக்குட்பட்ட கொல்லப்ரோலு சுங்கச்சாவடியில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது ஏ.டி.எம்.மையத்திற்கு பணம் கொண்டு செல்லும் தனியார் நிறுவன பாதுகாப்பு வாகனத்தை திறந்து சோதனையிட்டனர்.
அதில், சுமார் ₹17 கோடி மதிப்பிலான தங்கம் இருந்தது. விசாரணையில், விசாகப்பட்டினத்தில் இருந்து காக்கிநாடாவிற்கு தங்கம் கொண்டு செல்வது தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் தங்கத்தை பறிமுதல் செய்து பித்தாபுரம் தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் காக்கிநாடா கருவூல அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.
The post ஆந்திராவில் பறக்கும்படை சோதனை; பவன்கல்யாண் தொகுதியில் ரூ.17 கோடி தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.