×
Saravana Stores

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு!: மாணவ, மாணவிகளுக்கு தேசிய தேர்வு முகமையின் அறிவுரைகள் என்னென்ன?

சென்னை: நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை அறிவுரைகள் வழங்கியுள்ளது. இளநிலை மருத்துவப்படிப்புகளுக்காக தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தகுதி தேர்வு நாளை நடைபெறுகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளில் 2024, 2025ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து 24 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மட்டும் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவிகள், நீட் தேர்வை எழுதுகிறார்கள். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்.

தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை கடந்த 2ம் தேதி முதல் முகமையின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள 557 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ளது. தேர்வு குறித்து சந்தேகங்கள் எழுந்தால் 01140759000 என்ற எண்ணிலோ, அல்லது NEET@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புக்கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. நாளை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் நீட் தேர்வு மாலை 5.20 வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை அறிவுரைகள் வழங்கியுள்ளது.

அதாவது, முழுக்கை சட்டை அணியக்கூடாது, மாணவிகள் தலையில் பூ வைக்கக்கூடாது, தங்க நகை ஆபரணங்கள் அணிந்திருக்கக் கூடாது. மொபைல் போன் எடுத்து செல்லத்தடை, மாணவர்களின் குடிநீர் பாட்டில் தெளிவாக தெரியக்கூடியவையாக இருக்க வேண்டும். தெளிவில்லாத போட்டோ, கையொப்பம் உள்ள அட்மிட் கார்டுகளை மீண்டும் சரியாக பதிவிறக்கிக் கொள்ள வேண்டும். எலெக்ட்ரானிக் சாதனங்கள் எதையும் எடுத்து செல்ல முடியாது. காலணி அணியவும் தடை, மாணவர்கள் எழுதிப்பார்க்க வெள்ளை காகிதம் வழங்கப்படாது, புக்லெட்டிலேயே எழுதிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு!: மாணவ, மாணவிகளுக்கு தேசிய தேர்வு முகமையின் அறிவுரைகள் என்னென்ன? appeared first on Dinakaran.

Tags : National Examination Agency ,Chennai ,M. B. B. S. ,P. D. S. ,Dinakaran ,
× RELATED கேள்வித்தாள் வெளியானதால் மாற்றப்பட்ட...