×

பிரேசிலில் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு 70 பேர் மாயம்: தேடுதல் பணியில் மீட்பு படை தீவிரம்

சாவ் பாலோ: தென்அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு 29 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 39 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 70 பேர் மாயமாகி உள்ளதாகவும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 5 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 1.4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட போர்டோ அலெக்ரே நகரத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அர்ஜென்டினா மற்றும் உருகுவே நாட்டின் எல்லையில் அமைந்துள்ள பல நகரங்களுக்கு அங்கு அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

The post பிரேசிலில் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு 70 பேர் மாயம்: தேடுதல் பணியில் மீட்பு படை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Brazil ,Sao Paulo ,Rio Grande do Sul ,South American ,Dinakaran ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்