×

மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்

 


மும்பை: மும்பை விமான நிலையத்தில் கண்காணிப்பு மற்றும் சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது பிரேசில் நாட்டில் இருந்து வந்த ஒரு பயணியை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் தந்தார். அவரை தனி அறைக்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது 975 கிராம் எடையுள்ள கோகெய்ன் போதைப்பொருளை மாத்திரையாக உட்கொண்டு கடத்தி வந்ததை அந்த நபர் ஒத்து கொண்டார்.

இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அதிகாரிகள், போதைப்பொருளை பறிமுதல் செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரின் வயிற்றில் இருந்து ரூ.9.75 கோடி மதிப்பிலான, மொத்தம் 975 கிராம் எடை கொண்ட 110 கோகெய்ன் மாத்திரைகளை அகற்றினர்.

The post மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Mumbai Airport ,Mumbai ,Brazil ,Dinakaran ,
× RELATED ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள்: மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு