சத்தியமங்கலம், மே 4: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிலும் தோட்டக்கலை மாணவர்கள் பவானி சாகரில் தங்கி ஊரக கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதை மையமாக கொண்டு பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு வாழை மர தண்டின் கழிவிலிருந்து கூடை எவ்வாறு செய்ய வேண்டும் என்று பயிற்சி அளித்தனர். அதுமட்டுமின்றி எப்படி செய்ய வேண்டும் குறித்த காணொளியை காட்டி அவர்களை செய்யவும் வைத்தனர்.
இதனால், பெண்கள் பயன் அடைந்தனர். மேலும், தொப்பம்பாளையத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு உயிர் உரம் பற்றிய நன்மைகள் மற்றும் அதன் பயன்பாடு குறித்து விளக்கவுரை தந்தது மட்டுமின்றி காய்கறி விதைகளுக்கு உயிர் உரத்தை வைத்து விதை நேர்த்தி எப்படி செய்ய வேண்டும் என்று ஒரு செய்முறையை செய்து காட்டினர். இந்த செயல் விளக்கம் பயனுள்ளதாக இருந்ததாக மகளிர் சுய உதவி குழு பெண்கள் தெரிவித்தனர்.
The post வாழை மர தண்டில் இருந்து கூடை செய்தல் குறித்து செயல் விளக்கம் appeared first on Dinakaran.