திருப்பூர், மே.3: திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது. இந்த 60 வார்டுகளும் நிர்வாக வசதிக்காக 4 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. 4 மண்டலங்களிலும் தூய்மை பணியாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றிய வருகிறார்கள். இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் கோடை வெயில் கடந்த ஒரு வாரமாக கொளுத்தி வருகிறது. வெயிலின் காரணமாக தூய்மை பணியாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இதனால் அவர்களை வெயிலில் இருந்து பாதுகாக்கும் வகையில், தனியார் அமைப்பு சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு தொப்பி வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்கு மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் தலைமை தாங்கி தூய்மை பணியாளர்களுக்கு தொப்பிகளை வழங்கினார். தனியார் அமைப்பை சேர்ந்த கவிதா, மாநகர நல அதிகாரி கவுரி சரவணன் மற்றும் நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.
The post தூய்மை பணியாளர்களுக்கு தொப்பி வழங்கல் appeared first on Dinakaran.