×

முதியவர் மயங்கி விழுந்து சாவு

திங்கள்சந்தை,மே 1: வில்லுக்குறி அருகே மாடத்தட்டுவிளை மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வர்க்கீஸ்(76). இதய நோயால் பாதிக்கப்பட்டவர். இதற்காக கடந்த 20 ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த வர்க்கீஸ் இரவு சுமார் 11.50 மணி அளவில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மகள்கள் சுஜி, சைஜி ஆகியோர் மீட்டு ஆட்டோவில் தக்கலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வர்க்கீஸ் இறந்து விட்டதாக கூறி உள்ளனர். இது தொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

The post முதியவர் மயங்கி விழுந்து சாவு appeared first on Dinakaran.

Tags : Varghese ,Manthoppu ,Matathatuvilai ,Villukuri ,Thiruvananthapuram ,
× RELATED ஆபாசம், வன்முறை இல்லாத மழையில் நனைகிறேன்