×
Saravana Stores

ஈரோடு மாவட்டத்தில் தென்னை மரத்தில் வண்டு தாக்குதல்: தடுப்பது குறித்து விழிப்புணர்வு

 

ஈரோடு, மே 1: ஈரோடு மாவட்டம் இளையம்பாளையம் கிராமத்தில் தென்னை மரத்தில் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. இதில், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பிரியா பங்கேற்று, விவசாயிகளிடம் தென்னை மரத்திற்கு சேதம் விளைவிக்கும் சிவப்பு கூன்வண்டு, காண்டாமிருக வண்டு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், குமரகுரு வேளாண்மை கல்லூரியில் 4ம் ஆண்டு படிக்கும் மாணவிகளை கொண்டு தென்னையில் வேர் சிகிச்சை பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. இதேபோல், நல்லாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக பூமி தினத்தை முன்னிட்டு வேளாண் கல்லூரி மாணவிகள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து 4ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பது குறித்தும் விளக்கம் அளித்தனர்.

The post ஈரோடு மாவட்டத்தில் தென்னை மரத்தில் வண்டு தாக்குதல்: தடுப்பது குறித்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Coconut tree beetle ,Erode district ,Erode ,Ilaiyampalayam ,Priya ,Dinakaran ,
× RELATED போலீசார் சார்பில் 4 இடங்களில் பட்டாசு கடை துவக்கம்