×
Saravana Stores

ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வந்தால் ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர் இலவசம்: சந்திரபாபு, பவன்கல்யாண் இணைந்து வாக்குறுதி வெளியீடு

திருமலை: குண்டூர் மாவட்டம் உண்டவல்லியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு, ஜனசேனா தலைவர் பவன்கல்யாண், பாஜ ஆந்திர தேர்தல் இணை பொறுப்பாளர் சித்தார்த் நாத் சிங் ஆகியோர் இணைந்து நேற்று தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டனர். இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வந்ததும் 5 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு 2.20 லட்சம் வேலை வாய்ப்பு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்காக பென்சன் ரூ.6000, மூத்தகுடிமக்களுக்கான பென்சன் ரூ.4000 மாக உயர்த்தி வழங்கப்படும். 18 வயது நிறைவடைந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் பெண் குழந்தை நிதியின் கீழ் ரூ.1500 வழங்கப்படும். அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம். வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3000 நிதி உதவி வழங்கப்படும்.

தாய்க்கு வணக்கம் திட்டத்தில் ஒரு குழந்தைக்கு ஆண்டுக்கு ரூ.15,000 என பள்ளி கட்டணம் வழங்கப்படும். ஆண்டுக்கு மூன்று காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் முதலீடு தொகை வழங்கப்படும். பிற்படுத்தப்பட்டோர்களுக்கு 50 வயது நிரம்பினால் ஓய்வூதியம் வழங்கப்படும். ஏழைகளுக்கு இரண்டு சென்ட் வீட்டுமனை வழங்கப்படும். பெட்ரோல், டிசல், மது விலை குறைக்கப்படும். கஞ்சா, போதை மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வந்தால் ஆண்டுக்கு 3 காஸ் சிலிண்டர் இலவசம்: சந்திரபாபு, பவன்கல்யாண் இணைந்து வாக்குறுதி வெளியீடு appeared first on Dinakaran.

Tags : NDA ,Andhra Pradesh ,Chandrababu ,Pawan Kalyan ,Tirumala ,Telugu Desam Party ,President ,Janasena ,BJP Andhra Election Co-in ,Siddharth Nath Singh ,Undavalli ,Guntur district ,Dinakaran ,
× RELATED ஆந்திராவுக்கு இருண்டகாலம்: சொல்கிறார் ஜெகன்மோகன்