×
Saravana Stores

பள்ளிப்பட்டு அருகே திரவுபதியம்மன் கோயிலில் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே உள்ள திரவுபதியம்மன் கோயிலில் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவள்ளுர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே தமிழக ஆந்திர எல்லையில் உள்ள அத்திமாஞ்சேரி – வனதுர்காபுரம் ஆகிய 2 கிராமங்களை ஒருங்கிணைத்து திரவுபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் தீமிதி திருவிழா கடந்த 26ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் விழாவினை முன்னிட்டு, கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தினமும் பகலில் மகாபாரம் சொற்பொழிவும், இரவில் தெருகூத்தும் நடைபெற்று வருகிறது.

விழாவின் 4ம் நாளான நேற்று முன்தினம் மாலை திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதற்காக கிராம பெண்கள், மேள தாளங்களுடன் பட்டு வஸ்திரங்கள், மலர்கள், பழங்கள், பூஜை பொருட்களை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டதையடுத்து, திருக்கல்யாணம் புஜைகள் நடத்தி, திரவுபதி அம்மனின் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர், அப்போது, பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாக குழுத்தலைவர் ரமணராஜூ தலைமையில் கிராம மக்கள் செய்திருந்தனர்.

The post பள்ளிப்பட்டு அருகே திரவுபதியம்மன் கோயிலில் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Tirukalyana ,Thirupadiyamman Temple ,Pallipattu ,Tirukalyana Vaibhavam ,Thirupadhyayamman temple ,Sami ,Thiruvallur district ,Atthimanchery - Vanadurgapuram ,Andhra border of ,Tamil Nadu ,Pallipatu ,Thirukalyana Vaibhavam ,
× RELATED நீடாமங்கலம் அருகே ஆபத்தான நிலையில் சாய்ந்துள்ள டிரான்ஸ் பார்மர்