- Kummidipoondi
- கவரப்பேட்டை
- ர.M.K.
- ஆர்.கே.எம்
- பொறியியல் கல்லூரி
- ஆர்.எஸ்.முனிரத்தினம்
- கல்வி கமிட்டி
- செயல்பாடு
- தினம்
- கல்லூரி
- பொறியியல்
- தின மலர்
கும்மிடிப்பூண்டி: கவரப்பேட்டை ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பரிசுத்தொகையை ஆர்.கே.எம். கல்விக் குழுமத்தின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வழங்கினார். கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரியில் 29ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தினவிழா நேற்று நடைபெற்றது. ஆர்.எம்.கே. கல்விக்குழுமங்களின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தனர்.
ஆர்.எம்.கே. கல்வி குழுமம் துணை தலைவர் ஆர்.எம்.கிஷோர், செயலாளர் யலமஞ்சி பிரதீப், குழுமத்தின் ஆலோசகரும், முன்னாள் ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியருமான டி.பிச்சாண்டி, ஆலோசகர்கள் வி.மனோகரன், பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து ஆர்.கே.எம். கல்விக் குழுமத்தின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் கல்வியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவருக்கும், விளையாட்டு துறையில் சிறந்து விளையாடிய மாணவர்களுக்கும் தங்கம், ரொக்கப் பணம் ரூ.46 லட்சத்து 87 ஆயிரம் பரிசுத்தொகையை வழங்கினார்.
பின்னர் பரதநாட்டியம், ஆடல் பாடல், யோகா என மாணவிகள் பங்கேற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பட்டிமன்ற பேச்சாளர் புலவர் எம்.ராமலிங்கம் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கும், படிப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
The post ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பரிசுத்தொகை appeared first on Dinakaran.