×

104.9 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது

 

தர்மபுரி, ஏப்.30: தர்மபுரி மாவட்டத்தில், நேற்று அனல் காற்று வீசிய நிலையில் 104.9 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. தர்மபுரி மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக, கடந்த மூன்று வாரமாக அனல் காற்று வீசுகிறது. மதிய நேரத்தில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகிறது. கடும் வெயிலால் தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய், நுங்கு, முலாம்பழம் விற்பனை அமோகமாக நடக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் அதிக பட்சமாக நேற்று முன்தினம் 106.1 டிகிரி பாரான்ஹீட் வெயில் பதிவானது.

நேற்று 104.9 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து காணப்படும் நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி, வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று கலெக்டர் சாந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

The post 104.9 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED மூதாட்டி திடீர் சாவு