பண்ருட்டி, ஏப். 30: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒரு பேரூராட்சி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் அதே பகுதியை சேர்ந்த 19 வயது சிறுவன் பழகி வந்துள்ளார். திடீரென அந்த சிறுமி காணாமல் போனார். சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி சிறுவன் அழைத்துச் சென்றதாக அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெற்றோர்களுடன் செல்ல மறுத்த சிறுமியை காப்பகத்திற்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post 17 வயது சிறுமியுடன் காதல் 19 வயது சிறுவன் மீது வழக்கு appeared first on Dinakaran.