×

தபால் நிலையத்தில் ₹1 லட்சம் கையாடல்

செஞ்சி, அக். 29: செஞ்சி அருகே உள்ள மேல் ஒலக்கூர் துணை தபால் நிலையத்தில் பொதுமக்களின் சேமிப்பு கணக்கில் இருந்து அதிகளவு பணம் கையாடல் செய்யப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அந்த தபால் நிலையத்தில் அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கடந்த 2019ல் துணை தபால் அதிகாரியாக இருந்த குணசேகரன் என்பவர் பணியாற்றிய போது பொதுமக்களின் சேமிப்பு கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 752 பணத்தை கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. மேலும் குணசேகரன் தற்போது ஓய்வு பெற்று விட்டார் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து செஞ்சி கோட்ட தபால் ஆய்வாளர் அனு கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார், குணசேகரன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தபால் நிலையத்தில் ₹1 லட்சம் கையாடல் appeared first on Dinakaran.

Tags : Senji ,Upper Olakure Sub Post Office ,Senchi ,Dinakaran ,
× RELATED கனமழையால் விழுப்புரத்தில் உள்ள ஏரி...