- நம்பியூர் நகர தி.மு.க
- நெமோர்
- பந்தல்
- வடக்கு மாவட்ட தி.மு.க
- கோபி
- ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க
- ந.நல்லசிவம்
- நெம்மூர் பந்தல்
- நம்பியூர் பேருந்து நிலையம்
- ஈரோடு மாவட்டம்
- நீமோர் பந்தல்
கோபி, ஏப்.30: கோபி அருகே நம்பியூர் பேருந்து நிலையத்தில் நம்பியூர் நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தலை ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் திறந்து வைத்தார். கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்லாம் நீர்மோர் பந்தல் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோபி அருகே உள்ள நம்பியூர் பேருந்து நிலையத்தில் நம்பியூர் ஒன்றிய மற்றும் நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது.
இந்த நீர்மோர் பந்தலை நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளரும் பேரூராட்சி தலைவருமான செந்தில்குமார் தலைமையில் நம்பியூர் நகர திமுக செயலாளர் ஆனந்தகுமார் முன்னிலையில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் திறந்து வைத்து பயணிகளுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் அல்லாபிச்சை, எலத்தூர் பேரூர் கழக திமுக செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அந்தியூர், ஏப்.30: அந்தியூரில் தவிட்டுப்பாளையத்தில் திமுக பேரூர் கழகம் சார்பில் நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் அதிக அளவு வெப்பநிலை நிலவக்கூடிய முதல் மாவட்டமாக ஈரோடு மாவட்டம் உள்ளது. பொதுமக்களுக்கு வெயில் காலங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதிகளில் திமுக சார்பில் தற்போது நிலை வரும் கோடை காலத்தில் மக்களுக்கு உதவும் வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு நடந்தது. இதில் குறிப்பாக அந்தியூர் பேரூர் கழக திமுக சார்பில் அந்தியூர் பஸ் நிலையம், தவிட்டுப்பாளையம் பூக்கடை கார்னர் பகுதிகளில் நீர், மோர் பந்தல் திமுக பேரூர் கழகம் சார்பில் திறக்கப்பட்டது. பேரூராட்சி கழக செயலாளர் எஸ்.கே. காளிதாஸ் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாசலம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர் மோர் வழங்கினார்.
இதில் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணைத்தலைவர் ஏ.சி.பழனிச்சாமி, வார்டு கிளை செயலாளர் சையது முஸ்தபா, ரவி, வார்டு கவுன்சிலர்கள் யாஸ்மின் தாஜ், கவிதா, நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம், தகவல் தொழில்நுட்ப மாவட்ட பொறுப்பாளர் நாகராஜ், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், திமுக பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
The post பேருந்து நிலையத்தில் நம்பியூர் நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல்: வடக்கு மாவட்ட திமுக செயலாளர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.