- சந்திரபாபு
- ஜகன் மோகன்
- ஒய்எஸ் பாரதி பிரசாரம்
- திருமலா
- பாராளுமன்ற
- ஆந்திரா
- நெல்லூர்
- தெலுங்கு தேசம் கட்சி
- ஒய்எஸ் பாரதி
திருமலை: ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, நெல்லூரில் நடந்த பிரசார கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு, ‘முதல்வர் ஜெகன் மோகனை கொன்றால் என்ன செய்வாய்’ என்று பேசி உள்ளார். இந்நிலையில் முதல்வரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஒய்.எஸ்.ஜெகன்மோகனுக்கு ஆதரவு கேட்டு கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவில் வீடு வீடாக சென்று முதல்வரின் மனைவி ஒய்.எஸ்.பாரதி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘சந்திரபாபு, ஜெகன் மோகனை விட மூத்தவர். அவ்வாறு பொறுமை இழந்து பேசலாமா? ஒருவர் அவர்களது வளர்ச்சிக்கு தடையாக இருந்தால் மக்களிடம் முறையிட வேண்டும். அதை விட்டுவிட்டு கொல்ல வேண்டும் என்று நினைப்பது தவறு. சட்டத்திற்கு கண்கள் உள்ளது. சந்திரபாபுவின் பேச்சை அவரின் விருப்பத்திற்கும், மக்கள் முடிவுக்கும் விட்டு விடுகிறோம். மக்கள் நலன் மட்டும் எங்களுக்கு முக்கியம். புலிவெந்துலா தொகுதியில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சியை அனைவரும் காணலாம். கடந்த தேர்தலை காட்டிலும் ஜெகன் மோகன் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். ஜெகன் சொன்னால் செய்வார், சந்திரபாபு சொன்னால் செய்யமாட்டார் என்பது மக்களுக்கு தெரியும் மக்களே நல்ல முடிவு எடுப்பார்கள்’ என பேசினார்.
The post ‘முதல்வரை கொன்றால் என்ன செய்வாய்’ என சந்திரபாபு பேசலாமா? ஜெகன் மோகன் மனைவி ஒய்.எஸ்.பாரதி பிரசாரம் appeared first on Dinakaran.