×
Saravana Stores

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை

புதுடெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அதன் மூலம் அவர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் விடுதி மானியம் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி கடந்த மார்ச் 12ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலம் அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்ந்தது. இது கடந்த ஜனவரி 1ம் தேதி கணக்கிட்டு நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 2018ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, அகவிலைப்படி 50 சதவீதத்திற்கு மேல் உயரும் போது, ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, விடுதி மானியம் ஆகியவை தானாகவே 25 சதவீதம் உயர்த்தப்படும். அதன்படி, ஒன்றிய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று பிறப்பித்த உத்தரவில், அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை மாதம் ரூ. 2,812.5 ஆகவும், விடுதி மானியம் மாதம் ரூ. 8,437.5 ஆகவும் உயர்த்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், ஊனமுற்ற குழந்தைகளுக்கு இரு மடங்காக மாதம் ரூ 5,625 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி பெண் ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்புக்கான சிறப்பு உதவித்தொகை மாதம் ரூ.3,750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இவைகளும் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும்.

The post ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை appeared first on Dinakaran.

Tags : Union Govt ,NEW DELHI ,Union government ,
× RELATED 2024-25 காரிப் பருவத்தில் இந்தியாவின்...