×

மண்ணிவாக்கம் கல்லூரியில் ‘என் கல்லூரி கனவு’ நிகழ்ச்சி: கலெக்டர் தொடங்கி வைத்தார்

கூடுவாஞ்சேரி, ஏப். 28: ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நடத்துறையின் கீழ் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி “என் கல்லூரி கனவு” என்ற தலைப்பின் கீழ் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் திராவிட மற்றும் பழங்குடிய நல அலுவலகத்தின் சார்பில் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு “என் கல்லூரி கனவு” என்ற நிகழ்ச்சியை கலெக்டர் அருண்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார். இதில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான மேற்படிப்புகள் தொடர்வது குறித்து சிறப்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் ஒன்றிய, மாநில அரசால் வழங்கப்படும் கல்வி உதவி தொகைகள் குறித்து கலெக்டர் விளக்கி கூறினார். இதில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வெற்றிகுமார், வண்டலூர் வட்டாட்சியர் ராஜேந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post மண்ணிவாக்கம் கல்லூரியில் ‘என் கல்லூரி கனவு’ நிகழ்ச்சி: கலெக்டர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Mannivakkam College ,Kuduvanchery ,Adi ,Chengalpattu ,Dravida ,Dinakaran ,
× RELATED நல்லம்பாக்கம் ஊராட்சியில் ஏரியை...