×

வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு: பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம்

காங்கயம், ஏப்.28: காங்கயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் கல்லூரி கருத்தரங்க அறையில் நடைபெற்றது. வரவேற்புரையை கல்லூரியின் இணை பேராசிரியர் மற்றும் கணினி அறிவியல் துறை தலைவர் ஜெயந்தி வழங்கினார். வணிக நிர்வாகவியல் துறை தலைவர் குமாரசாமி முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் நசீம்ஜான் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியினை, இரண்டாம் ஆண்டு தமிழ் இலக்கியம் வி.அபிநயா மற்றும் சங்கீதா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

இதில் கல்லூரி வளர்ச்சிக்கு பெற்றோர்களின் பங்களிப்பும் முதன்மையானது என்றும் காலஞ்சென்ற ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி கல்லூரிக்கு 35 கம்யூட்டர் வழங்கியதையும், செய்தித்துறை அமைச்சர் முபெ.சாமிநாதன் கல்லூரி பேருந்து நிறுத்த நிழல் குடைக்கு ரூ.15லட்சம் வழங்கியதையும் குறிப்பிட்டனர்.

The post வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு: பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Parent Teacher Association ,Kangayam ,Parent ,Teacher Association ,Kangayam Government College of Arts and Science ,Jayanthi ,Department ,Computer Science ,Department of Business Administration… ,Dinakaran ,
× RELATED ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு...